ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படத்தில் நடிக்க இருக்கும் சிலம்பரசன்… இயக்குனர் யார் தெரியுமா…?

0

சிறுவயதிலே சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் தனது அப்பா TR மூலமாக சினிமா உலகத்திற்குள் நுழைந்தவர் தான் சிம்பு.இவர்களின் சிறு வயது நடிப்பு முதல் இப்போது வரை அதே எனர்ஜி உடன் நடித்து கொண்டிருப்பவர்.இந்நிலையில் தற்போது இவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இப்படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அவர்கள் இயக்க உள்ளார். அஸ்வத் மாரிமுத்து அவர்கள் தற்போது டிராகன் என்கிற படத்தை இயக்கி கொண்டு உள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் சிம்புவை வைத்து அடுத்த படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.

தனது 27-வது படமாக இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்ச்சத்திரங்களை பற்றி இந்நிறுவனம் கூடிய சீக்கிரத்தில் தகவல்கள் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *