லப்பர் பந்து டீம்மை நேரில் சென்று வாழ்த்து கூறிய சிலம்பரசன்…

தமிழ் சினிமாத்துறையில் முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின் அட்டகத்தி படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி ஒரு பெரிய வெற்றியே கொடுத்தவர் தான் தினேஷ்.இப்படத்தின் வெற்றி காரணமாக இவரே அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்கிறோம்.இவர் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர் கூட்டங்களை திரட்டி வைத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் திருடன் போலீஸ்,விசாரணை போன்ற படங்களை நடித்து இருந்தார்.இப்பொது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார்.தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்யும் அட்டக்கத்தி தினேஷ் அவர்கள் சமீபத்தில் ஊர்வசி அவர்களுடன் இணைந்து ஜே பேபி படம் நடித்திருந்தார்.இப்படம் அமோக வெற்றியை கொடுத்தது.இதில் இவரின் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

இதைத்தொடர்ந்து இவர் தற்போது கிரிஷ் கல்யாணுடன் இணைந்து லப்பர் பந்து என்ற படம் நடித்து இருப்பார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது எனலாம். திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினரை சிம்பு அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.