ரஜினி மற்றும் அமிதாப்பச்சன்-க்கு இணையாக சண்டைக்காட்சிகளில் பின்னி பிடலெடுத்த ஒரே நடிகை விஜயசாந்தி…

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினி இருப்பது போலவே ஹிந்தியில் சூப்பர் ஸ்டாரா இருப்பவர் தான் அமிதாப் பச்சன். இவர் 80ஸ் 90ஸ் மற்றும் இந்த காலத்தில் கூட பிரபலமாக மக்கள் மத்தியில் உள்ளவர்.இந்திய அளவில் பிரபலமான ல் நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் மட்டும் தான்.

இவர்கள் இருவரும் தற்போது வேட்டையன் படத்தில் 30 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசும் அளவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அன்றிலிருந்து இன்று வரை இவர்களின் நடப்பு மாறாமல் இருக்கிறது.

90ஸ் காலத்தில் இவர்களின் வரிசையில் சண்டையிலும் சரி முக்கிய இடத்திலும் வரும் ஒரே நடிகை என்றால் அது விஜயசாந்தி அவர்கள் தான். சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தில் அமிதாப் பச்சனும் பின் ரஜினியும் அதைத்தொடர்ந்து அடுத்து விஜயசாந்தி அவர்களும் இருந்துள்ளார் என அப்போது பத்திரிகைகளில் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. கோடி மேல் சம்பளம் வாங்கிய நடிகைளில் இவர் தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed