குழந்தை போன்று கியூட்டாக மகனுடன் போஸ் கொடுக்கும் ஷாலினி அஜித்… வைரலாகும் புகைப்படம்…
காதல் கோட்டை படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகர் அஜித். தற்போது இவர் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் சினிமா மீதுள்ள ஆர்வம் ஒரு பாகம் இருந்தாலும் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் தான் இவரின் அதீத ஆர்வம் எனலாம். இவர் அமர்க்களம் படத்தில் நடித்ததை தொடர்ந்து படத்தின் கதாநாயகியான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அட்லீ இருபடங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து பிசியாக உள்ளார். இருப்பினும் தன்னுடைய கார் ரேஸிங் டீம்காகவும் வொர்க் பண்ணிட்டு வருகிறார்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அவர்கள் இன்ஸ்ட்டாவில் ஒரு அக்கவுண்ட்டை கிரியேட் செய்து அடிக்கடி குடும்ப புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது அவரும் அவரின் மகனும் கியூட்டாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.