ட்ரெண்டிங்கா சும்மா கெத்தா சொகுசு கப்பலில் பர்த்டே கொண்டாடிய சீரியல் நடிகை ரவீனா….!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரவீனா. இந்த சீரியல் மூலம் இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனவர். குழந்தை நட்சத்திரமாக விஷாலின் பூஜை படத்தில் அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். மேலும் இவர் ராட்சசன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன பின்னர் தான் சீரியலில் நடிப்பதற்கு வந்தார். மேலும் இவர் நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் அடிக்கடி நடனம் ஆடி வீடியோஸ்களை வெளியிடுவார். மேலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின்னர் இவர் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.

எப்போதும் தன்னுடைய இணையதள பக்கத்தில் அக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய பிறந்த நாளை கோவாவில் சொகுசு கப்பலில் வைத்து சும்மா கெத்தாக கொண்டாடி அதற்கான வீடியோஸ் மற்றும் போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோஸ் மற்றும் போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1

pic2

pic3

pic4

pic5
