ரஜினியை விட விஜய் வளர்ந்ததால் சீமானை தூண்டிவிட தான் திடீரென சீமானை சந்தித்து இருப்பார் ரஜினி… சரமாரியாக ரஜினியை விமர்சித்த அந்தணன்…

சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் தான் விஜய். ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் உதறி விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.

அதில் இதுவரை எந்த மாநாட்டிற்கு கூடாத கூட்டம் கூடியது.கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதில் ககலந்து கொண்டனர். அந்த மாநாட்டை தொடர்ந்து பலரும் விஜயை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவர் தான் சீமான். இவர் விஜயை தம்பி நீங்க குட்டிகதையெல்லாம் சொல்ல வேண்டாமென்று பயங்கரமாக பேசியிருந்தார். மேலும் உங்களுக்கு வரலாறே தெரியாது எனவும் கலாய்த்து இருந்தார்.

இதை தொடர்ந்து ரஜினி அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு சீமானை அவர் வீடு சென்று நேரில் சந்தித்திருப்பார். இது விஜையின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சீமான் முன்னாடியெல்லாம் ரஜினியை மேடையில் தாக்கி பேசுவார் இதனாலே இருவரும் பகைமைக்குள்ளாகினர். ஆனால் இவர்களின் திடீர் சந்திப்பு விஜயை எதிர்ப்பதற்காக இருக்குமோ என கேவி எழுப்பிருந்தனர். இந்நிலையில் விமர்சகர் அந்தணன் இதைப்பற்றி விமர்சித்ததில் ரஜினி தன்னை விட விஜய் வளர்ந்து வருவதால் அவரை எதிர்க்க தான் சீமானை சந்தித்து இருப்பார் இதில் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை என கூறியுள்ளார்.

You may have missed