சரிகாமப மேடையை நெகிழ வைத்த பாடல்… மன்னவனே அழலாமா..!! என்ற பாடலை பாடியே அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுமி…

சரிகமப நிகழ்ச்சி இந்த வாரம் நெஞ்சம் மறப்பதில்லை சுற்றை நடத்தியுள்ளது. எப்போதுமே பல சுற்றின் பின் வரக்கூடிய இந்த சுற்று இந்த சீசனில் தொடக்கத்திலே வந்துள்ளது ரசிகர்களை மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது எனலாம். போன வாரம் தான் பக்தி பாடல் சுற்று முடிவடைந்தது. இந்த சுற்றில் யாரையுமே எலிமினேஷன் செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் நெஞ்சம் மறப்பதில்லை சுற்று நடந்ததன்பிரமோ வெளியாகியுள்ளது. இதில் அனைத்து குழந்தைகளுமே மிக அருமையாக பாடியுள்ளனர். இந்த சீசனில் கலந்திருக்கும் அனைத்து சிறுமி சிறுவர்களும் மிக திறமையாக இருப்பதால் எலிமினேஷன் என்பது மிக கடினம் தான். இந்நிலையில் இந்த வாரம் யாரை எலிமினேஷன் செய்யப்போகிறார்கள் என ரசிகர்கள் அனைவருமே பதட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

இந்த நெஞ்சம் மறப்பதில்லை சுற்றில் பாடகி சுசிலா அவர்களின் குரலில் அப்படியே மன்னவனே அழலாமா என்ற பாடலை பாடியே மேடையில் அனைவரையும் கண்கலங்க வைத்த்துள்ளார் சிறுமி யோகஸ்ரீ. தன் குரலாலே சரிகமப மேடையையே கண்கலங்க வைத்த சிறுமியின் இந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may have missed