கண்ணம்மா பாடலுக்கு ஸ்வரம் வரிசை எடுத்து பாடிய சிறுமி…சரிகமாபாவில் நடுவர்களே ஆச்சரியப்பட்ட தருணம்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன்3 இந்த வருடம் முடிந்த நிலையில் அடுத்த வருடத்திற்கான மெகா ஆடிஷன் நடத்தப்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கான சரிகமப சீசன் 4 முடிந்தநிலையில் வெற்றியாளராக மகிழன் வந்தார்.

இரண்டாவது இடத்தில் வடசென்னையை சேர்ந்த ஸ்வேதாவும், மூன்றாவது இடத்தில் விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வீரபாண்டியும் வந்து வெற்றி கோப்பையை பெற்றார்கள். இதைத்தொடர்ந்து சிறுவர்களுக்கான சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4க்கான மெகா ஆடிஷன் நடைபெற்று வருகிறது. இதில் தொகுப்பாளராக அர்ச்சனாவும் நடுவராக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, எஸ்பிபி சரண் மற்றும் சைந்தவி போன்றோரும் வந்தனர்.

இதில் தர்ஷினி என்ற ஒரு 10 வயது சிறுமி கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடலை பாடை நடுவர்களை அசத்தியுள்ளார். பாடலை பாடியதோடு மட்டுமில்லாமல் அதற்கு அழகாக ஸ்வர வரிசையும் பாடியுள்ளார். இதற்க்கு நடுவர்கள் மிக அருமை என எழும்பி நின்று பாராட்டியுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் ஆள் பேபிஸ் ஆர் சூப்பர் வாய்ஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed