நானும் கெரியரின் உச்சத்தில் இருந்து இறங்கி தான் அரசியல் வந்தேன்… மேடையில் சரமாரியாக விஜயை தாக்கி பேசிய நடிகர் சரத்குமார்…

200 கோடி மேல் ஒரு படத்திற்கே சம்பளம் வாங்கும் நடிகர் தளபதி விஜய் ஆனால் அவர் அதெயெல்லாம் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து மக்களுக்கு நல்லது பண்ண வேணுமென்று தமிழக வெற்றி கழக என்னும் கட்சி தொடங்கி அதற்கான முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தார்.

இருப்பினும் இவர் 2026க்குள் ஒப்புக்கொண்ட படத்தையெல்லாம் முடித்துவிட்டு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இவர் தனது முதல் கட்சி மாநாட்டில் 26 கொள்கைகளை எடுத்து வைத்தார். அதில் அவர் நான் என் கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளேன் என கூறி இருந்தார்.

இதற்க்கு பதில் கூறும் விதமாக தற்போது தனது கட்சியை பாஜாகவுடன் இணைத்திருக்கும் நடிகர் சரத்குமார் அவர்கள் மேடையில் நானும் என் கெரியரின் உச்சத்தில் இருந்து தான் அரசியலில் வந்தேன் எனவும், விஜய் ஹிந்தியை நிராகரிக்கிறார். ஆனால் அவர் வீட்டில் மட்டும் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள் எனவும் கடுமையாக மேடையில் விமரிசித்து பேசியுள்ளார்.
