AI மூலம் குரலை கொண்டு வரலாம் ஆனால் எமோஷனலை கொண்டு வர முடியாது… தயவு செய்து அப்பாவின் குரலை பயன்படுத்தாதீர்கள்… வருத்தத்தில் SPB மகன் சரண்…

தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் பல மொழிகளில் பலவிதமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் SP.பாலசுப்பிரமணியம். இவர் கொன்றோரான சமயத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களில் ஒருவர்.ஆனால் இவரின் மரணத்தை மக்களால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாடல்களை தத்ரூபமாக பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

இவரது மகன் தான் சரண். இவர் ஒரு திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என எப்பொழுதும் பிசியாக இருப்பவர். இவர் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடகராக இருந்தார்.பின்னரே நடிக்க தொடங்கினார். சமீப காலமாக இவர் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக வருகிறார். அதன்படி தற்போது இவர் ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4-ல் நடுவராக வருகிறார்.

இதனைத்தொடர்ந்து இவரிடம் ஒரு பேட்டியில் இவரின் தந்தையான எஸ்பிபி-யின் குரலை AI மூலம் பயன்படுத்துவதை பற்றி கேட்டபொழுது ,அவர் அதில் எனக்கும் சிறிதளவு கூட விருப்பமில்லை AI மூலம் ஒருவரின் குரலை கொண்டுவரலாம் அனால் கட்டாயம் எமோஷனலை கொண்டு வர முடியாது எனவும் அதுமட்டுமில்லாமல் இப்போம் ஒரு பாடலை பாட வேண்டுமா வேணாமா என்று அவர்களால் முடிவெடுக்க முடியும் ஆனால் இந்த டெக்னாலஜி மூலம் அது முடியாது எனவும்,தயவு செய்து யாரும் அப்பா குரலை AI மூலம் பயன்படுத்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may have missed