பாலிவுட் கதாநாயகி ஆகும் விக்ரமின் செல்ல மகள் சாரா…

தமிழ் சினிமாவில் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளி வந்த படம் தான் தெய்வத் திருமகள். இந்த படம் அப்பா பொண்ணு பாசத்தை மிக அழகாக காட்டியிருந்தது. மேலும் இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி படமாகவே அமைந்தது. மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமான இவர் இந்த படத்தின் மூலமாகவே அறிமுகம் ஆனார்.

மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஈக்குவலாக தன்னுடைய நடிப்பையும் வெளிப்படுத்திருப்பார். மேலும் இந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் செல்ல மகளாக இடம் பிடித்தவர். ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா கடந்த ஆண்டு வெளி வந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதா பாத்திரத்தின் சிறு வயது இளமை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குழந்தையாக பார்த்த அவரை வளர்ந்த பெண்ணாக பார்த்ததும் குட்டி சாராவா இது என ஆச்சரியப்படுத்தியது. அப்போதே இவரை பார்த்து கதாநாயகி வாய்ப்பு இவருக்கு கிடைக்கும் என பலரால் பேசப்பட்டது. மேலும் இவர் தற்போது கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அதுவும் பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தன்னை விட வயதில் பெரியளவில் வித்தியாசம் உடைய ரன்வீர் சிங்க்குக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவ்வளவு வயது வித்தியாசத்தில் நடிக்க வேண்டுமா என்ற கேள்வியும் அரசல் பரசலாக உருவாகி இருக்கிறது.