நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஷ் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தல அஜித்தின் குடும்பம்… வைரலாகும் புகைப்படங்கள்…
மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் கமல்காசனுடன் பஞ்சதந்திரம் படத்தில் இன்றளவும் உள்ள சிறு பிள்ளைகள் வரை பேசும் அளவிற்கு பிரபலம் ஆனவர் தான் நடிகர் ஜெயராமன். இவருக்கு திருமணமாகி ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கின்றனர். இவரின் மகன் தான் காளிதாஸ் ஜெயராமன். இவர் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆனால் இவரின் இந்த படம் அந்த அளவு ஹிட் ஆகவில்லை. அதை தொடர்ந்து இவர் மலையாளத்தில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.தற்போது தான் இவரின் திருமணம் நடந்து முடிந்தது. இவர் தாரிணி காலிங்கராயர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க பல பிரபலங்கள் சென்றுள்ளனர். அந்தவகையில் நடிகர் தல அஜித் அவர்களின் மகள், மகன் மற்றும் மனைவி ஆகியோர் கலந்துள்ளனர். அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அஜித் அவர்களின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.