சக்தி கொடு சக்திமான்..!! 90ஸ் கிட்ஸின் ஆசையின்படி தொடங்கப்பட்ட சக்திமான் 2… ஆனந்தத்தில் துள்ளி குதிக்கும் 90ஸ் கிட்ஸ்…

90ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கு ஒரு பிடித்த ஹீரோவாக இருந்தவர் என்றால் அது சக்திமான் தான்.இன்று கூட இந்த அத்தொடரை ஆன்லைனில் சென்று ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் தான்.இளமையில் 90ஸ் கிட்ஸ் விளையாடுவதற்கு கூட சக்திமான் பொம்மைகளை தான் பயன்படுத்துவார்கள் அந்த அளவு ரசிகர்களை கொண்டது சக்திமான் தொடர்.

இதில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா அவர் நடித்திருப்பார். ஒவ்வெரு செயலும் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார் இவர். இத்தொடரின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியது. தற்போது இத்தொடரை ஒரு படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறார் முகேஷ் கண்ணா.

சில பல காரணத்தினால் இது தடை பட்டு கொண்டிருந்ததால் தானே ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்துள்ள முகேஷ் கண்ணா தற்போது படப்பிடிப்பினையும் தொடங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

You may have missed