உண்மை கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் சாய் பல்லவி…வெளியான அமரன் பட சாய் பல்லவி intro காணொளி…

0

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் அமரன். இப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று வெளிவருகிறது. இந்த படம் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.


இந்த படத்தில் அமரணாக சிவகார்த்தியன் நடிக்கிறார். அமரன் சிவகார்த்திகேயன் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்பொழுது அமரனின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடிக்கும் சாய்பல்லவியின் வீடியோ வெளியாகி உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல் இந்த படத்தில் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் அமரன் மற்றும் இந்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.


தன்னுடைய நாட்டின் மேல் உள்ள பற்றினால் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தை பெருமையோடு ஏற்று கொண்ட ஒரு சிங்க பெண் தான் இந்து இந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அருமையாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் அமரன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீது இருக்கும் காதலும் இறுதியில் தன்னுடைய கணவரான மேஜர் அமரன் வீர மரணம் அடைந்த பிறகு அசோகா சக்கரா விருது வாங்கும் போது இருந்த நிமிர்வும் என ஒரிஜினல் இந்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக சாய் பல்லவி நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இறுதியில் “கடலுக்கும் ஆகாசத்திற்கும் இடையில் உள்ள தூரம் தான் எனக்கும் அவனுக்கும் உள்ள தூரம்” என அமரனின் இந்துவாக இந்து கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ள சாய்பல்லவிக்கு பாராட்டுக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *