ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நிற்கும் இந்த சிறுமி யார் தெரியுமா..? பல மொழி படங்களிலும் நடித்து அசத்தும் தமிழ் நடிகை..

மலர் டீச்சர் என்றால் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பிரேமம் படம் தான். இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாகவும் தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாகவும் இருந்து வருகிறார். பிரேமம் படம் நடித்து கொண்டிருக்கும் போது அவர் MBBS படித்து கொண்டிருந்தார். பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் அநேக படங்களில் நடித்து வருகிறார்.
தமிழகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பள்ளி படிப்பை கோயம்பத்தூரிலேயே முடித்திருக்கிறார். நடனத்தில் அதிக விருப்பம் கொண்டதால் அவர் விஜய் டிவியில் உங்களில் யார் பிரபு தேவா நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் முதன் முதலாக 2005-ல் கஸ்தூரி மான் என்ற தமிழ் திரைப்படத்தில் கதநாயகியின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார். 2008-ல் ஜெயம் ரவி நடிப்பில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்த தாம் தூம் படத்தில் இடம் பெற்றிருப்பார். பின்னர் 2015-ல் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

தமிழில் நடிகர் தனுஷின் மாரி-2, நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்திலும் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகம் மேலும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தெலுங்கில் வருவதால் தொடந்து தெலுங்கில் நடித்து கொண்டு வருகிறார். மிக யதார்த்தமான நடிகையாகவும் எந்த வித அலட்டல் இல்லாமல் மிக எளிமையாக பழகும் குணம் கொண்ட தமிழ் பெண்ணாக இருப்பதால் மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ளார்.
தற்போது க்யூட்டாக இருக்கும் அவரது சிறு வயது புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….
pic1

pic2
