BB வீட்டைவிட்டு வெளியேறிய சாச்சனா… BB வீட்டிலேஅதிக சம்பளம் இவருக்கா..!!கசிந்த தகவல்…

விஜய் டீவியில் செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. கடந்த 7 வருடங்களாக இந்த ஷோவை உலக நாயகன் கமல் காஷன் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வருகிறார். இதில் போட்டியாளராக 18 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது எலிமினேஷன் மூலம் ஒவ்வொரு நபர்களாக வெளியேறி உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியே சென்றனர். நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வர்ஷினி வெங்கட், ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகிய 6 பேர் உள்ளெ வந்தனர். தற்போது 60 நாட்கள் BB வீட்டில் வெற்றிகரமாக கடந்து உள்ளது.

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தது ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி, சாச்சனா, முத்துக்குமரன், ஆனந்தி போன்று 12 பேர் இருந்தனர். இதில் இரு நபர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுளார்கள். அதில் முதலாவது ஆனந்தி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவதாக சாச்சனா வெளியே அனுப்பப்பட்டார். தற்போது இவர் ஒரு நாளிற்கு 20 ஆயிரம் வைத்து மொத்தம் 60 நாளிற்கு 12 லட்சம் சம்பளம் வாங்கி BB வீட்டிலே அதிக சம்பளம் வாங்கிய லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார் சாச்சனா என தகவல் வெளியாகியுள்ளது.

You may have missed