சாய்பல்லவி பற்றி கிளம்பிய வதந்தி… கோபத்தில் பதிலடி கொடுத்த சாய்பல்லவி…

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று தற்போது ஒரு முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நடிகை தான் சாய்பல்லவி. இவர் ஒரு நடன அழகி எனலாம். அந்த அளவு இவரின் நடனம் அனைவரையும் கட்டிப்போடும். இவரின் அழகே தனித்துவமானது. படத்தில் நடிக்கும்போது கூட எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் நடிக்கும் ஒரே நடிகை இவர்.

இவர் தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அதில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர் மற்றும் சீதாவாக நடிக்கும் சாய்பல்லவி புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இதை பார்த்த அனைவருமே அருமை சீதா கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் தான் சாய்பல்லவி என கமெண்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதாவாக நடிப்பதற்காக சாய்பல்லவி சைவ சாப்பாடு மட்டுமே சாப்பிடுகிறார்.மேலும் அவர் வெளியிடங்களில் சாப்பிடுவதில்லை என வதந்தியை கிளப்பிருந்தது பிரபல பத்திரிக்கை ஒன்று . இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாய்பல்லவி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதே மாதிரி தான் அடிக்கடி வதந்தி கிளம்புகிறது. மேலும் இப்படி வதந்தி கிளம்பினாள் நான் கட்டாயம் சட்டப்படி தான் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.
