2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடல் வரிசையில் இடம்பிடித்தது சாய் அபயங்கரின் கட்சி சேரா பாடல்…
கட்சி சேரா என்னும் ஆல்பம் பாடல் மூலம் பிரபலம் ஆனவர் தான் சாய் அபயங்கர். இவர் தன் முதல் பாடலிலே அனைவரையுமே திரும்ம்பி பார்க்க வைத்தவர். அதை தொடர்ந்து இவர் இசையமைத்த ஆச கூட பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த இரு பாடல்களின் மூலமாகவே இவர் உலகளவில் ட்ரெண்ட் ஆனார். இவரின் ஆல்பம் பாடலே ஹிந்தி, தெலுங்கு என மொழி மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இவர் லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையப்போகிறார். லோகேஷ் கனக ராஜ் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கும் பென்ஸ் படத்திற்கு இவர்தான் இசையமைக்க உள்ளார். மேலும் சூர்யாவின் 45 ஆவது படத்திலும் இவர்தான் இசையமைக்கிறார். வெறும் 20 வயது ஆகும் இவரின் சாதனை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இளம் வயது இசையமைப்பாளரான இவர் மேலும் ஒரு சாதனை உலகளவில் படைத்துள்ளார். 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடல் வரிசையில் சாய் அபயங்கரின் பாடலான கட்சி சேரா பாடல் இந்தியளவில் 4வது இடத்த்தையும் ஆச கூட பாடல் 9வது இடத்த்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.மேலும் உலகளவில் கட்சி சேரா பாடல் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. தற்போது இவரின் இந்த சாதனை தான் வைரலாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.