மறைந்த கணவனின் பிறந்த தேதியை பற்றி எமோஷனலாக பதிவை வெளியிட்ட ரகுவரனின் மனைவி ரோகிணி…

தமிழ்சினிமாத்துறையிலே வில்லன் என்றால் ராதா ரவியின் பின் நினைவு வருவது என்றால் அது ரகுவரன் தான். இவரின் குரல் பிறவியிலே வில்லத்தனமாக தான் இருக்கும். இவரின் குரல் மற்றும் தனித்துவமான நடிப்பினாலே இவர் சினிமாத்துறையில் சிறந்து விளங்கினார். இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகும் திறன் படைத்தவர் இவர்.

இவரை போன்ற ஒரு வில்லன் தமிழ் சினிமாத்துறையில் இனிமேலும் கட்டாயம் வரமாட்டார். இவர் வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார். இவர் தன் சக நடிகையான ரோஹிணியை காதலித்து திருமணம் செய்து கொன்றார். இவர் சில வருடங்களின் முன் தான் மறைந்தார். இவரின் இழப்பு தமிழ் சினிமாத்துறையை மிகவும் பாதித்தது.

இந்நிலையில் அவரின் மனைவி ஒரு பதிவை எமோஷனலாக வெளியிட்டுள்ளார். மறைந்த என் கணவரின் பிறந்த தேதி டிசம்பர் 10 தான். ஆனால் பிரபல பழங்கால பாலிவுட் நடிகரான திலீப் குமார் அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 11ஐ தான் என் கணவர் பிறந்த நாளாக கொண்டாடுவார். அவரின் அம்மா எப்போதுமே இவரின் பிறந்த நாள் டிசம்பர் 10 என்று தான் சொல்லிக்கொண்டிருப்பார் எனவும் மேலும் மிஸ் யூ ராகு எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
