பிறரை வளரசெய்து அழகு பார்ப்பதில் சிறந்தவர் அவர்… தனுஷை பற்றி புகழ்ந்து பேசிய காமெடி நடிகர் ரோபோ சங்கர்…

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார்.இப்படி பிசியாக இருக்கும் தனுஷை பற்றி அவ்வப்பொழுது சர்ச்சை கிளம்புவது இயல்புதான். தற்போது கூட நயன்தாராவின் ஆவணப்படத்தை வெளியிடாமல் தடுத்ததால் நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷை கிழித்து எடுத்தனர்.

இருப்பினும் அவர் தன் வேளைகளில் மட்டுமே மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். ராயன் படத்தை அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இட்லிக்கடை படத்தையும் இயக்கி வறுகிர்றார்.இதை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் படம் ஒன்றையும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் தனுஷை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் மாறி படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவத்தை பற்றியும் கூறியுள்ளார். தனுஷ் அவர்கள் ஒருவரை வளர செய்து அழகு பார்ப்பதில் ஒரு சிறந்த மனிதர் என தனுஷை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் அவர் மிக நகைச்சுவையாக பேசி எல்லோரிடனும் பழகுவார் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
