சிவகார்த்திகேயனை கலாய்த்ததற்காக மனதார மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி… அப்படி என்ன சொல்லி கலாய்த்திருப்பார்..??

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடக்கி இன்று வெள்ளித்திரை நாயகனாக வலம் வருகிறார். இவரின் கடும் முயற்சியால் மட்டுமே இந்த அளவிற்கு வந்தார் எனலாம்.

இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த அமரன் படம் இந்தியாமுழுவதும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.இப்படம் வசூலில் 300 கோடியை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் அவரின் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் ஒரு விருது விழாவில் பிரபலங்கள் அனைவரையும் சும்மா கலாய்த்து கொண்டிருந்தேன். அப்போது சிவகார்த்திகேயன் மேடையில் எமோஷனல் ஆகி அழுததை கலாய்த்து பேசினேன். அப்போது அது பெரிதாக தெரியவில்லை.பின் அதை டீவியில் பார்த்துவிட்டு SK-வை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டேன் என கூறியுள்ளார்.
