வெளியாகியது சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படத்தின் ட்ரைலர்… மகனின் படத்தில் AI மூலம் வந்துள்ள கேப்டன் விஜயகாந்த்…

80ஸ் மற்றும் 90ஸ் காலத்தில் கதாநாயகனாக கலக்கி கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் அவர்கள்.இவர் நடிப்பதில் அதிக படங்கள் அரசியல் கருத்துக்களை கூறும் விதமாகவே இருக்கும். இவரின் தலைமைப்பண்பு மற்றும் வழிநடத்தும் திறமையை வைத்தே இவருக்கு மக்கள் கேப்டான் என்ற பட்டத்தை அன்புடன் வழங்கினர்.

இவர் நடிக்கும் போதே அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். பின் நடிப்பில் இருந்து விலகி அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டார். இவர் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உண்டு. அதில் சண்முக பாண்டியன் தற்போது படைத்தலைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் முதல் படம் சாகாப்தம் ஆகும். இதைத்தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியுடன் மதுரை வீரன் படத்தில் நடித்திருந்தார். இருபடங்களுமே அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படைத்தலைவன் படத்திற்கு ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மகனின் படத்தில் தந்தை AI மூலம் வருகிறாரா அதுமட்டுமின்றி யானையெல்லாம் வைத்து கதைக்களத்தை வித்தியாசமாக கொண்டுபோவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

You may have missed