ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் கோலாகலமான திருமணம்… வெளியான நாகசைதன்யா-துலிபாலாவின் திருமண அழைப்பிதழ்…

கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்கு ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவியின் ஜோடியாக வந்த சோபிதா துலிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இதைத்தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேட் கமெண்ட் மட்டுமே வந்தது.

நாகசைதன்யா அவர்கள் சமந்தாவை ஏமாற்றிவிட்டார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தனர்.இந்நிலையில் நாகசைதன்யா மட்டும் சோபிதா அவர்களின் திருமண ஏற்பாடுகள் பற்றி தகவல்களை நாக அர்ஜுனா வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து இவர்களின் நிச்சயர்த்தார்த்த சடங்கு சம்பர்தாயங்கள் கோலாகலமாக நடந்தது.இந்நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் வெளிவந்துள்ளது.

அதில் நாகசைதன்யா-லக்ஷ்மி சோபிதா இருவரின் திருமணம் வருகிற டிசம்பர் 4 அன்று ஹைதராபாத்தில் நாகார்ஜுனாவின் சொந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறும் என்றும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திருமண அழைப்பிதழில் நாகார்ஜுனாவின் முதல் மனைவியான லட்சுமி – ஷரத் பெயரையும் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed