மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடு பட சில டிப்ஸ்.. பயனுள்ள பதிவு..!

ethirmarai_ennam_nzz

மனதில் எதிர்மறையான எண்ண அலைகள் உருவாவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏம்மாற்றம் மற்றும் தோல்விகளால் எதிர்மறையான எண்ணங்கள் வருகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதை தடுக்கும் முக்கிய காரணியாகும்.

இதில் சம்மந்தப்பட்ட நபரை மட்டுமே அல்லாது அவருடன் பழகுபவர்களையும் பாதிக்கும்.அவர் பேசும் போது உதிர்க்கும் வார்த்தைகள் நேர்மறையாக இருந்தால் மனதுக்கு புத்துணர்ச்சியும், அதே சமயம் எதிர்மறையாக கூறும் போது பழகுபவரின் மனதிலும் தேவை இல்லாத சஞ்சலங்கள் ஏற்படும். சரி இந்த குறிப்பிட்ட வளையத்தில் இருந்து வெளிவர சில டிப்ஸ்சை பார்க்கலாம் வாருங்கள்.

நன்றாக இரவில் எந்த வித சிந்தனையும் இல்லாமல் சீக்கிரமாக தூங்குகள். மேலும் அதிகாலையில் எழும்புங்கள்.

சுறு சுறுப்பாக அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்தவுடன் தலைக்கு குளிப்பது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

உண்ணும் உணவை ருசித்து உண்ணுங்கள்.

தினமும் பத்து நிமிடமாவது மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

பிடித்தமான இசையை கேட்டு மகிழுங்கள்.

மனதை மாசுபடுத்தும் நபர்களை தவிருங்கள். மனசை குப்பை போல் அல்லாமல் அழகான மாளிகை போல் இருக்க எண்ணங்களை ஒழுங்குபடுத்துங்கள்.

தோட்டங்களில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். கடவுளால் படைக்கப்பட்ட அற்புதமான உலகில் இயற்கை மனசை இலகுவாகும். இலைகள் உதிர்த்தாலும் மீண்டும் முளைவிட்டு பூக்கும், காய்க்கும். இயற்கையோடு இயற்கையாக மாறி தான் என்பதை சற்று மறந்து விடுங்கள். புதியதாக பிறந்த குழந்தை போன்று சிந்தியுங்கள்.

எதை சிந்திக்க வேண்டும் எதை சிந்திக்க கூடாது என்று மனதை கட்டுப்படுத்துங்கள். மனது பறவை போன்று பறந்துகொண்டே இருக்கும். குறிக்கோள் இல்லாமல் பறக்கும் பறவையால் எந்த இலக்கையும் அடையமுடியாது. குறிக்கோள் ஒன்றை தீர்மானித்து நேர்மையாக உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள்.

சில செய்முறை பழக்கங்களும் மனதுக்கு நேர்மறையான எண்ணத்தை உருவாகும்..

ஒரு பெரிய அகண்ட பாத்திரத்தில் கால்கள் மூழ்கும் வரை வெது வெதுப்பான வெண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள், ஒரு கை பிடி வேப்பிலை, 3 அல்லது 5 மிளகு, கொஞ்சம் கல் உப்பு, மருதாணி விதைகளை கலந்து 20 முதல் 30 நிமிடங்கள் செய்து வரலாம். இப்படி செய்வதால் மனது நிச்சயம் புத்துணர்ச்சி அடையும். வாரத்தில் ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ செய்து வந்தால் நல்லது.

You may have missed