விமானத்தில் இருந்த படி க்யூட் ரியாக்ஷன் கொடுத்த ராஷ்மிகா மந்தனா…! இணையத்தில் வைரல் ஆகும் போட்டோஸ்…!

இந்திய நடிகைகளில் பிரபலமானவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு என்று இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. இவர் கன்னட மொழியில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருபவர்.

முதல் படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், காம்ரேட், வாரிசு, புஷ்பா என இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். மேலும் அவர் சமீபத்தில் நடித்து வெளியான அனிமல் திரை படம் பல விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் வசூலில் சாதனை படைத்தது.

அவர் தற்போது கைவசம் 2 படங்களை வைத்து நடித்து வருகிறார். புஷ்பா 2 மற்றும் ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். தற்போது விமானத்தில் இருந்து அவர் கொடுத்த கியூட் போஸ் போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. மேலும் அந்த போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
pic1

pic2
