ராயல் என்பீல்டு பைக்கில் ஊர் சுத்தும் சரவணன் மீனாட்சி தொடர் நாயகி ரட்சிதா…
நடிப்பின் மீது கொண்ட காதலால் வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக முயற்சி செய்து பின் சின்னத்திரையில் களமிறங்கியவர் தான் நடிகை ரட்சிதா. இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானார். இவரை தெரியாத வீட்டு பெண்மணிகள் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர் சரவணன் மீனாட்சி தொடரில் இரு சீசன்களை நடித்து கொடுத்தார்.
இவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலம் ஆகியிருந்தாலும் இவர் முதலில் நடித்த தொடரென்றால் அது பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் தான். இதை தொடர்ந்து இவர் பி[ஆலா தொடர்களில் நடித்தார். இருப்பினும் இவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. ஆனால் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு தமிழ்நாட்டு மருமகள் என்ற ஒரு அடையாளத்தை வாங்கி கொடுத்தது.
இன்றுவரை இவரை சிலை மீனாட்சி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் ஊறி போய் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து இவர் பிக் பாஸிலும் கலந்து கொண்டார். தற்போது இவர் கலார்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்னும் தொடரில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் தற்போது தன்னுடைய ராயல் என்பீல்டு பைக்கில் பீச் சைடுல போஸ் கொடுப்பது போல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீனாட்சி என்போமே மாஸ் தான் என்று கமெண்ட்களை தூவி வருகிறார்கள்.
pic1
pic2
pic3
pic4