ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா…! 171 வடிவங்களில் ரஜினியின் உருவ படங்களை கொலு வைத்து கொண்டாடிய தீவிர ரசிகன்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் 73 வயதாகும் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் 10 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மேலும் அவர் இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரெனெ நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிக்கு இப்படியும் ஒரு ரசிகர் இருக்கிறார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் என்னும் இடத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவருடைய பெயர் கார்த்திக். 49 வயதான இவர் ரஜினியின் தீவிர ரசிகர் அல்ல பக்தன் என்றே சொல்லலாம். இவர் ரஜினி மீது கொண்டுள்ள ஈர்ப்பால் ரஜினியின் உருவத்தை கல்லால் செதுக்கி அவருக்கு என்று தன்னுடைய வீட்டில் ஒரு தனி அறை வைத்து ரஜினியின் உருவத்துக்கு தினமும் பால் பன்னீர் இளநீர் போன்ற ஒன்பது வகையான அபிஷேகம் செய்து வருகிறாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் நவராத்திரி திருவிழா ஆரம்பித்ததினால் ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள 171 உருவங்களை மரபலகையாலும் களிமண்ணாளும் வடிவமைத்து அதனை கொலு பொம்மைகள் வைப்பது போல் வைத்து பொது மக்கள் பார்வைக்காக வைத்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் உடல் நலம் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.