ஒரு கிராமத்தின் கனவையே நிறைவேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்… சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்…

விஜய் டீவியில் சிறுவர்களை வைத்து மிக விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜூனியர். தற்போது வரை இந்த நிகழ்ச்சி 9 சீசன்களை கடந்துள்ளது. சமீபத்தில் 10 வது சீசன்க்கு ஆள் தேர்ந்தெடுப்பு நடந்தது. அதில் பல மழலையின் குரல்கள் நடுவர்களை மட்டுமில்லாமல் பார்ப்பவர்களையும் பரவசமாக்கும் அளவே உள்ளது எனலாம்.

இதில் ஒவ்வொரு குழந்தைகளும் தன் வயதிற்கு மீறி பாடல்காய் பாடி அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்ள பல விடீயோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது இயல்புதான். அந்தவகையில் தற்போது ஒரு சிறுவனின் குரல் மிகவிபும் வைரல் ஆகியது. அந்த சிறுவனின் பெயர் விஷ்ணு இவன் புதுக்கோட்டை மாவட்டம் குருகுளாம்பட்டி என்கிற சிறு கிராமத்தை சேர்ந்தவன்.அவன் குரலை விட அவனின் கிராமத்தின் கதையும் அவனின் கதையும் தான் அனைவரையும் மிகவும் தாக்கியது. அந்த சிறுவனின் வீட்டில் டிவி கூட இல்லாத அளவு மிக கஷ்டப்படுகிற குடும்பத்தில் வாழ்கிறான்.

இச்சிறுவனின் குடும்பக்கதையை கீதா அனைவருமே இவனுக்கு உதவி செய்தார்கள். இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் விஷ்ணுவிற்கு கீபோர்டை வழங்கினார். தொகுப்பாளர் ஆனந்த் டீவியை பரிசாக கொடுத்தார். ப்ரியங்கா இவர்களின் வீட்டிற்கு கேஸ் அடுப்பு வாங்கி கொடுத்தார். மேலும் பாடகர் மனோகர் அவர்கள் மற்றும் சித்ரா அவர்கள் விஷ்ணுவின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக கூறி இருந்தார்கள். இந்நிலையில் நியூர்ச்சியை டீவியில் பார்த்த ராகவா லாரன்ஸ் அவர்கள். இந்த கிராமத்திற்கு சென்று போர் போட்டு அனைவருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்த்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1

pic2
