மனைவின் சொல் பேச்சுக்கு கட்டுப்படும் ராசி இவர்கள் தான்… பெண்கள் இந்த ராசியினரை மிஸ் செய்யாதீங்க..!

raasi_palan_couples

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக சொல்வதைக் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் வீட்டில் மனைவியின் கை ஓங்கியிருப்பதைக் குறிக்கும்.

சரி, யாரெல்லாம் தங்கள் மனைவியிடம் ரொம்பவே பம்மி, அடங்கிப் போவார்கள் தெரியுமா? இதோ இந்த ராசிக்காரர்கள் மனைவியிடம் ரொம்பவே அடங்குவார்கள். வாங்க தெரிந்துகொள்வோம்.

சிம்மம்

கோபத்துக்கு பெயர் பெற்ற இவர்கள் சூரியனை அதிபதியாகக் கொண்டவர்கள். எப்போதுமே மற்றவர்களை அடக்கியாளும் இவர்கள் திருமணத்துக்குப் பின்பு மனைவிக்கு நல்ல முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களோடு நேரத்தை செலவிட விரும்புவார்கள். அதற்கு இணையாகவே இவர்கள் மனைவியும் இவர்களை நேசிப்பார். மனைவியின் பேச்சுக்கு பதில் மொழி செல்லாத அளவுக்கு மனைவிக்கு அடிமையாகி விடுவார்கள்.

மகரம்

சனி பகவானுக்கு அதிபதியான இவர்களது அணுகுமுறை திருமணத்துக்குப் பின்பு மாறும். நல்லது, கெட்டது எதையும் மனைவியுடம் பகிர்ந்து கொள்வார்கள். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகமான அளவு இருக்கும். மனைவியின் பேச்சுக்கு நல்ல மதிப்பு கொடுப்பார்கள்.குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் அரவணைத்துச் செல்வார்கள்.

கும்பம்

இவர்களுக்கு திருமணப்பிணைப்பு மிக முக்கியம் என கருதுவார்கள். மனைவியுடன் கூடுதல் நேரம் செலவிடுவார்கள். மனைவியின் கருத்துக்கு ஒத்துப்போவார்கள். குடும்ப உறவின் மேன்மைக்காக இதைச் செய்வார்கள். இவர்களின் இல்லற வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும்.

மீனம்

இவர்களுக்கு சகிப்புத்தன்மை மிக அதிகம். பேசுவது அதிகமாவதே இவர்களுக்குப் பிடிக்காது. இவர்கள் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். மனைவி சொல்வதையும் மதிப்புக்கொடுத்து கேட்பார்கள். தாய்க்கு கொடுக்கும் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் தாரத்துக்கும் கொடுப்பார்கள்.

You may have missed