புரட்டாசி மாதத்தில் நோ அசைவம்…. காரணம் என்ன ? அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு என்ன..!

புரட்டாசி மாதம் வந்தாலே ஆடு, கோழிகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான் ஜாலியாகி சுற்றி கொண்டிருக்கும். ஏன் என்றால் இந்த மாதத்தில் மக்கள் அசைவம் சாப்பிடுவதை விரும்புவதில்லை. அதனால் கசாப் கடைகளில் ஆடு, கோழிகளுக்கெல்லாம் விடுமுறை.


மேலும் காலம் காலமாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை நம் முன்னோர்கள் தவிர்த்து வந்துள்ளனர். மேலும் முக்கியமாக புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் காக்கும் கடவுளான விஷ்ணு பகவான் அவதரித்த மாதமாக புரட்டாசி மாதம் கொண்டாடப்படுகிறது. மேலும் புரட்டாசி சனி கிழமை விஷ்ணுக்கு உகந்த தினமாகவை பார்க்கப்படுகிறது. அதனால் ஹிந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.


மேலும் அறிவியல் பூர்வமாக பார்த்தால் இந்த மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைவாக இருக்கும் இதனால் பூமியின் சுழற்சியில் இருந்து நமக்கு செரிமானம் குறைவாக காணப்படும். செரிமான குறைவு ஏற்படும் பொழுது வயிற்று உபாதைகள் ஏற்பட்டு கெட்ட கொழுப்புகள் உடம்பில் தங்கி விடும் அதனால் அசைவம் தவிர்ப்பது நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிட்டால் சூட்டை கிளப்பிவிடும் என்று யாரும் அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதில்லை. மேலும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கூறியிருந்தாலும் இன்னும் சிலர் மே மாதம் தான் வெயில் தாக்கம் அதிகமாகி இருக்கும் அதனால் அசைவம் சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.


நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த பழக்கத்தை நாமும் இப்பொது கடைபிடித்து வருகிறோம். வருடத்தில் ஒரு மாதமாவது அசைவத்துக்கு விடுமுறை கொடுக்கலாமே. எது என்றாலும் அளவோடு சாப்பிட்டால் நோய் இன்றி இருக்கலாம். “நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

You may have missed