தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை போலவே தன் மகளையும் அலங்கரித்து அழகு பார்த்த குக் வித் கோமாளி புகழ்…

விஜய் டீவீயில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தான் புகழ்.இவர் முதலில் இதே சேனலில் அது, இது, எது? மற்றும் சிரிப்புடா போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில்தான் கலந்து கொண்டிருந்தார்.இதில் தன தனி திறமையின் மூலம் போராடி முன்னே வந்தவர். இவரின் நகைச்சுவை, பாவனைகள் மற்றும் குரோம்புத்தனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கோலிசோடா 2-வில் வில்லனகா நடித்து அனைவரையும் மிரட்டிவருகிறார். இவர்க்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். சமீபத்தில் தான் இவரின் மகள் பிறந்தநாளை மிக கோலாகலமாக கொண்டாயிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் ஒரு புகைபடத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மக்களுக்கு அழகாக ரெட்டை ஜடை கட்டி அருகில் அதேபோன்று ஒரு புகைப்படத்தையும் வைத்து போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் தந்தையாய் மாறிய மகாராணி… மகனாய் பிறந்த என்னை மகளாய் அலங்கரித்து அழகு பார்த்தார் என் அம்மா. இன்று தன் மகளை(மகாராணியை) என்னை போல் அலங்கரித்து அழகு பார்க்கிறாள் அவளின் அம்மா(என் மனைவி) என வாசகத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
