CWC 5 டைட்டில் வின்னர் ப்ரியங்கா-வின் வெற்றி பதிவு… கலாய்க்கும் ரசிகர்கள்

விஜய் டிவி யில் முதலிடத்தில் இருக்கும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இதை ரசித்து பார்க்காத மக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இது மக்கள் மத்தியில் பாப்புலர்.

சமையல் கலையே வைத்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை மிகவும் நகைச்சுவையாக கொண்டு செல்கின்றனர். இதனாலையே இதற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் . இதில் தற்போது CWC 5 யின் இறுதி கட்டம் நடந்தது. அதில் டைட்டில் வின்னர் ஆக ப்ரியங்கா அறிவிக்கபட்டார்.
இது குறித்து ப்ரியங்கா வெளியிட்ட பதிவில் நான் இதற்கு முன் “கிச்சன் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியில் கலந்து தோல்வி அடைந்தேன். ஆனால் இப்போது 10 வருடங்கள் கழித்த நிலையில் “குக் வித் கோமாளி” கோப்பை என் கையில் உள்ளது. இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் அவர் நான் எப்பொழுதும் என்னை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்து கொள்வேன். அதுவே எனக்கு பெருமை எனவும் கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே விஜய் டிவி உங்களுக்கு தான் டைட்டில் வின்னர் கொடுப்பார்கள் என தெரியும் என்றும், விஜய் டிவி இதை சொல்லி வைத்து நடத்துவதாகவும் ப்ரியங்கா விற்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
