உடல்நிலை சரியில்லாமல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்…

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகராகவும் நகைச்சுவை கதைக்களத்தில் கலக்கி வரும் ஒரு நடிகர் தான் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவர் சந்தானம் அவர்களுடன் பல காமெடி படங்களில் நடித்துள்ளார். இவரை சிறு குழந்தைகளுக்கு கூட மிக பிடிக்கும். அந்த அளவு நகைச்சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் இவர்.

அதுமட்டுமின்றி இவர் பல சர்ச்சைகளில் சிக்கி சிறைச்சாலைக்கும் சென்றதுண்டு. சில மோசடி வழக்குகளிலும் சிக்கியுள்ளார். தற்போது இவரையும் நடிகை வனிதா அவர்களையும் வைத்து கூட மிக பெரிய சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பால் கிண்டியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையிலே தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம்.
