500 எபிசோடுகளை தாண்டிய பொன்னி… வெற்றி கொண்டாட்டத்தில் பொன்னி தொடர் குழுவினர்…

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொடர் தான் பொன்னி. இத்தொடர் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. ஏழை குடும்பத்து பெண் பணக்கார வீட்டிற்கு எதிர்பாராமல் திருமணமாகி சென்று அனுபவிக்கும் சிக்கல்காளை இத்தொடர் எடுத்துரைக்கும் விதமாக கதை சென்று கொண்டிருக்கிறது.

இத்தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவி அவர்கள் ஏற்கனவே விஜய் டீவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் நாயகனின் தங்கையாக வந்திருப்பார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் எனது வீட்டில் எப்பொழுதும் படி படி என்பார்கள் நான் நடிப்பை மட்டுமே விரும்பி ஆடிஷன் பல சென்றுள்ளேன். எதிலும் செலக்ட் ஆகாததால் பின் படிப்பை தொடர்ந்தேன். அப்போது தான் டிக் டாக் செய்தேன் எனக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது என கூறி இருந்தார்.

இவருக்கும் சிறகடிக்க ஆசை கதாநாயகன் வெற்றி வசந்திற்கும் தற்பொழுது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடந்தது. தற்போது இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்த நிலையில் அதனை குழுவினர் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். இப்புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருக்கின்றன ர்.

You may have missed