பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா ஓபன்…திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன….வெளியே சொல்லாத காரணம் இதோ…

விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 முடிவுக்கு வந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். மக்கள் எதிர் பார்த்தது போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடர் தந்தை மகன்களை மைய கருத்தாக கொண்டு எடுக்க பட்டிருக்கிறது.மக்களோட வரவேற்பை பெற்று கொண்டு வெற்றிகரமாக ஒளி பரப்பாகி வருகிறது. இதில் பாண்டியனின் முதல் ,மகன் கதிர்க்கு ஜோடியாக வருபவர் தான் சரண்யா.

இந்த தொடரில் தங்க மயில் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரில் அனைவரையும் மக்கள் பாராட்டினாலும் தங்க மயில் கதாபாத்திரத்தை மக்கள் திட்டி வருகின்றனர். அவர் இந்த சீரியலில் நல்லவரா? கெட்டவரா? என யாராலும் இன்னும் யூகிக்க முடியவில்லை.இவர் சமீபத்தில் வரலக்ஷ்மி பூஜை கொண்டாடி தாலியோடு உள்ள போட்டோவை எடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகி விட்டதா ஏன் வெளியில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அவர் எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன. அது என்னோட தனிப்பட்ட பர்சனல் என்பதால் அது பெர்சனலாகவே இருக்கட்டும் என்பதற்க்காக வெளியில் சொல்லவில்லை எனவும்,நான் ஏற்கனவே என்னுடைய காதல் கணவர் ராகுல் உடன் சேர்ந்து பல போட்டோஸ்கள் போட்டு உள்ளேன். அதற்க்கு பலர் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என கேட்டுள்ளனர். நான் ஆம் எனவும் கூறவில்லை இல்லை எனவும் கூறவில்லை. பெர்சனலாக இருக்கட்டும் என நினைத்து கூறவில்லை என சொல்லியுள்ளார். மேலும் தன்னுடைய காதல் கணவன் இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது என கணவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
