அட நம்ம ஆபிஸ் சீரியல் நடிகை மதுமிலாவா இது…? திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

office-serail-actress-mathumila-after-mariage-chang-over-photo

மதுமிளா லட்சுமி சின்னத்திரை மற்றும் பெரியத்திரையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். இவர் யாழ்ப்பாணம், இலங்கையை சேர்ந்தவர். இவர் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஆப்பிஸ் தொடரில் கதாநாயகியின் தோழியாக கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்திருப்பார். தொடரில் நடித்ததற்காக விஜய் டிவி அவார்ட் வழங்கியது. அதன் பிறகு அவர் பெரிய திரையில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனார்.

பூஜை படத்தில் நடிகர் விஷாலுக்கு தங்கை பாத்திரத்திலும், ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஹன்ஷிகா மோத்வானிக்கு தோழியாக நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் மாப்பிள்ளை சிங்கம், சங்கிலி புங்கிலி கதவை திற, நெஞ்சமெல்லாம் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2017-ல் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் ஜேம்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். 2020-ல் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையுடன் இருக்கும் புகை படத்தினை தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகை படங்கள் வைரல் ஆகி வருகிறது….அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

pic1

pic2

You may have missed