மீண்டும் உடல் எடை குறைத்து மாஸ் லுக்கில் நிவின் பாலி.. புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..

nivin-pauly-weight-recent-photos

மலையாளம் சினிமா யதார்த்தமான கதை அம்சம் கொண்ட படங்களாக இருக்கும். மலையாள திரை துறையில் அறிமுகம் ஆன நடிகைகளே தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை கதாநாயகிகளாக கோலோச்சி வருகிறார்கள். தமிழ் படங்களுக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ அதே மாதிரி கேரளாவிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். விஜய், சூர்யா போன்ற தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல் தமிழ் நாட்டிலும் மலையாள நடிகர்களுக்கு இங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்……அந்த வரிசையில் முதலில் இருப்பது பிரிதிவிராஜ், நிவின் பாலி, மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான் போன்ற கேரள நடிகர்களுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நேரம் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் அறிமுகம் ஆனவர் நிவின்பாலி. இதன் பிறகு பிரம்மம் படத்தில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் மொழி மாற்றம் செய்யாமல் சூப்பர் ஹிட்டான ஒரே படம் பிரமம். இவர் தனது திரை வாழ்வை சிறிய கதாபாத்திரத்தின் மூலமே மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் ஒரு இன்ஜினியர் ஆவார், திரை துறைக்கு வருவதற்கு முன்பு அவர் பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரின் தந்தை இறந்து விட ஊரில் உள்ள தாய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டி சொந்த ஊருக்கு வந்து சிறு சிறு வேலைகள் செய்து வந்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் 2012-ல் கதாநாயகனாக நடித்த ‘தட்டத்தின் மறையத்து’ படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு அவர் நடித்த பிரேமம் படம் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமானார்கள்.

சமீபகாலமாக உடல் எடை கூடி காணப்பட்ட நிவின் பாலி படங்களிலும் அதே மாதிரியான தோற்றத்தில் நடித்து வந்தார். தற்போது அவர் தன்னுடைய உடல் எடையில் 25 கிலோ குறைந்து மீண்டும் பழைய நிவின் பாலியாகவே காணப்படுகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். அவர் இயக்குனர் ராமின் இயக்கத்தில் 7 கடல் ஏழு மலை படத்தில் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது……எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்றும் நிவின் பாலி ‘கம் பேக்’ கொடுத்து விட்டார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்….அந்த புகை படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

pic1

pic2

You may have missed