பூஜை போட்டு தடபுடலாக அடுத்தக் கட்டத்தை தொடங்கிய அஜித்தின் விடாமுயற்சி…

வேட்டையன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் தான் அஜித் அவர்களின் விடாமுயற்சி.இப்படத்தின் ஷூட்டிங் மட்டுமே உலகத்தை சுற்றும் வகையில் அனைத்து நாடுகளிலும் நடைபெறுகிறது.

பட ஷூட்டிங் இடையிலே அஜித் அவர்களின் வீர சாகசமான பைக் ரைடும் நடந்தது. இப்படத்தை மகிழ் திருமேனி அவர்கள் இயக்கி வருகிறார்.இப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியே வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பட வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில் படத்திற்கான அடுத்தகட்ட வேலைக்கு நேற்று பூஜை நடத்தபட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிய நிலையில் ஆரவ் தான் டப்பிங் கொடுக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic1

pic2
