புது கார்..!! புது ஸ்டைல்..!! என கலக்கி கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொன்டே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவை சீசன்-2-வில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையினுள் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஸ்வாதி கொன்டே. இவரின் நடிப்பு மிகவும் தற்செயலானது போன்று இருக்கும். இவர் ஈரமான ரோஜா தொடர் மூலம் மக்கள் மனதை தொட்டார். இவருக்கு பல ரசிகர்கள் உண்டு.

சின்னத்திரை நடிகைகளுக்கு என்றே பல் ரசிகர்கள் கூட்டங்கள் உண்டு. அந்த வரிசையில் இவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஈரமான ரோஜா முடிந்ததை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சி தொடரில் நடித்து வருகிறார். இவர் மெய்யழகன் படத்தில் நடித்ததன் மூலமாக வெள்ளித்திரையிலும் அறிமுகம் ஆனார்.

இவர் இன்ஸ்ட்டாவில் மிகவும் ஆர்வம் காட்டுபவர். அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து பகிரும் பழக்கம் கொண்டவர். தற்போது இவர் ஒரு புது கார் வாங்கியுள்ளார். அதனை தன் அப்பா மற்றும் அம்மாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
