சீரியல் நடிகர் நேத்ரனின் மறைவிற்கு பின் இதுவரை யாரும் பார்க்காத தன் அப்பாவின் இளம் வயது புகை படங்களை வெளியிட்ட நேத்ரன் மகள் அபிநயா…

சின்னத்திரையின் தொடரில் வில்லன் சகுனி போன்ற கதாபாத்திரங்களில் பின்னி பிடலெடுப்பவர் தான் நடிகர் நேத்ரன். சீரியலில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தவர். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற பொன்னி, முத்தழகு, பாக்யலக்ஷ்மி சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே சொல்லலாம். இவரும் இவரது மனைவி தீபாவும் சீரியலில் நடிக்கும் பொழுதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவரது மனவிவி தீபா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கப்பெண்ணெ சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அபிநயா அவர்கள் கனா காணும் காலங்களில் நடித்துள்ளார். இரண்டாவது மகள் அஞ்சனா அவர்கள் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஞ்சனாவும் நேத்திரனும் சேர்ந்து பாய்ஸ் அஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் நேத்திரன் புற்று நோய் காரணமாக சில தினம் முன் காலமானார். இவர் கடந்த 6 மாதங்களாக நிறையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் உயரிழந்தார்.இவரது இழப்புக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவரின் மூத்த மகள் அபிநயா அவர்கள் தற்போது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் நேத்ரன் அவர்களின் இளம் வயது புகைப்படங்களை பகிர்ந்து எல்லோருக்கும் நீங்கள் வில்லனாக இருந்தாலும் நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ஹீரோ தான் அப்பா எனவும் நீங்கள் சாதிக்காததையும் நாங்கள் சாதிப்போம் அப்பா எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

pic8
