குறை கூறியவர்களுக்கு என்னால் முடியும்.. என சிரித்து பதிலடி கொடுத்த நெப்போலியனின் மகன் தனுஷ்….

பாரதிராஜாவால் சினிமா உலகத்திற்குள் வந்தவர் தான் நெப்போலியன். இவர் வில்லனாகவும், ஹீரோவாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும்,தாத்தாவாகவும், அப்பாவாகவும் அனைத்து வேடங்களிலும் நடித்து கலக்கியுள்ளார். இவர் மகன் சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நெப்போலியன் அவர்கள் தனது மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காகவே அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு குடும்பத்துடன் கப்பலில் சென்றனர். தனுஷால் விமானத்திலே பயணிக்க முடியவில்லை இவருக்கெல்லாம் எதற்கு திருமணம் என பலரும் தனுஷை சோசியல் மீடியாவில் கேள்வி கேட்டு வந்தனர்.

இதையெல்லாம் பார்த்த தனுஷ் அவர்கள் மனம் உருகி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்னை ஏளனம் செய்பவர்களுக்கும் நெகடிவ் ஆக பேசுபவர்களுக்கு நான் கட்டாயம் எப்படி வாழ்வேன் என்று ப்ரூப் பன்றேன். என்னமாதிரி இருக்குறவங்களும் முயற்சி பண்ணுங்க எல்லாராலையும் முடியும் என மோட்டிவேஷனாக பேசியுள்ளார்.