தன் உடன் பிறந்த தம்பியின் திருமணத்தை தடபுடலாக கொண்டாடிய நடிகை நஸ்ரியா… வைரலாகிய புகைப்படங்கள்…

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை நஸ்ரியா. இவர் சிறு வயதில் இருந்தே சினிமா மீது இருந்த ஆர்வத்தால் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். இவர் மலையாளத்தில் பழுங்கு என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து பல படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

பின் மாட் டாட் படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாளத்தில் அறிமுகமாக்கினார். இப்படம் மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நேரம் படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமாகினார். இப்படம் நல்ல ஒரு வரவேற்பை தமிழ் ரசிகர்களிடம் இவருக்கு வாங்கி கொடுத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்து ஒரு பயங்கரமான ஹிட் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து இவர் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

பின் இவர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின் அந்த அளவு படங்களில் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா. தற்போது மிக நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நானியுடன் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நடித்தியொருப்பார். தற்போது இவர் அவரின் உடன்பிறந்த தம்பியின் திருமண புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
pic1

pic2
