வரிசையில் நின்று கூட்டத்தோடு சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட நயன்-விக்கி… வியப்பில் பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…

சினிமாத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நயித்தாரா.இவர் தமிழ் மலையாளம் தற்போது ஹிந்தியிலும் கூட நடித்து வருகிறார்.கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேல் கதாநாயகியாக மட்டுமே திரையுலகில் வலம் வருகிறார்.இவர் நானும் ரவுடி படத்தில் தன்னோடு பணியாற்றிய இயக்குனர் விக்கினேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு உயிர்,உலக் என இரு மகன்களும் உள்ளார்கள்.

தற்போது கூட பல தடைகளை தாண்டி இவரின் ஆவணப்படத்தை நெட்பிலிக்ஸ் தளத்தில் வெற்றிகரமாக வெளியிட்டார்.இதை வெளிவிட பல பிரபலங்கள் தடையாக இருந்தபோதிலும் அதை முறியடித்து வெளியிட்டார்.அந்தசமயம் தனுஷ் நயன்தாரா பிரச்சனையே மிகவும் பரவலாக பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா பிறந்தநாளைக்கு அவர் வட இந்தியாவில் கணவர் விக்கியுடன் இருக்கிறார்.இந்நிலையில் அவர் ஓரு சிறு ஹோட்டலில் வரிசையில் நின்று அனைவரின் மத்தியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டு கொள்கிறார்கள். இந்த வீடியோவை விக்கினேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் t was the best birthday dinner ever it felt so real n normal என நயன்தாரா கமெண்ட் செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

You may have missed