ஆண் குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷத்தில் நாயகி தொடர் கதாநாயகி வித்யா பிரதீப்…

அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வித்யா பிரதீப் அவர்கள். இவர் சன் டீவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்தும் வந்தார். இவர் 13 ஆண்டுகள் முன்னதாகவே புகை படைகலைஞர் பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆனதே பல பேர்க்கு தெரியாது.

2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்கிற படத்தில் அறிமுகமான வித்யா பிரதீப் அவர்கள் விருந்தாளி, பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள்,சைவம், அதிபர், களரி, மாரி 2, தடம், சித்திரை செவ்வானம், செல்ஃபி, பவுடர், எண்ணித் துணிக, இன்ஃபினிட்டி, எக்கோ, ஸ்ட்ரைக்கர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த தடம் படம் மிகுந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.

இவர் சமீபத்தில் தனது கணவருடன் பேபி பம்ப் போட்டோஷூட் நடத்தியுள்ளார். 13 ஆண்டுகள் திருமணமாகி இப்போது கர்ப்பமாக இருந்த வித்யா பிரதீப் அவர்கள் தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.இந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
