இத சொல்லி சொல்லியே என்னை எல்லாப் படத்திலும் நடக்க வச்சிட்டீங்களே… ஆடுகளம் நரேனிடம் ஜாலியாக சிரித்து பேசிய தல அஜித்…

தல அஜித் அவர்கள் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்தினின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் பொருளாதார சூழ்நிலையால் சில மாதங்களாகவே அஜித் அவர்களின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மறுபடியும் தொடங்கி படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்றுள்ளது.சில காலமாகவே அஜித் அவர்கள் பெரிதளவு படங்களில் நடிப்பது இல்லை 2 வருடத்திற்கு ஒரு படம் என்பது போலவே நடித்து வருகிறார்.இந்நிலையில் ஆடுகளம் நரேன் அவர்கள் அஜித்துடன் ஜாலியாக பேசிய ஒரு நிகழ்வை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, அஜித் அவர்கள் மிகவும் தன்னடக்கமானவர் எனவும் அவர் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட் ல நான் சரியாக டைலாக் பேசுறேனான்னு என்று கேட்டாரு அதற்க்கு நான் நீங்க நடந்து வந்தாலே பொது ம் டைலாக்கே தேவ இல்லனு சொன்னேன். அதற்கு அவர் இப்படி சொல்லி சொல்லியே என்ன எல்லாப்படத்திலும் நடக்க வச்சிட்டீங்களேன்னு சிரிச்சிட்டே பேசுனாரு என கூறியுள்ளார்.

You may have missed