நானும் ரவுடி தான் படத்தில் முதலில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க இருந்தது இவரா..!! வெளியான தகவல்…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேது பதியின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் நானும் ரவுடி தான். இதில் நயன்தாரா அவர்கள் காது கேற்காதது போல் மிக தத்ரூபமாக நடித்து அசத்திருப்பர். விஜய் சேதுபதி அவர்களும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிருப்பர்.

தற்போது நயன்தாரா அவர்களின் வாழ்க்கையை கதையாக வைத்து Nayanthara: Beyond the Fairy Tale என்கிற ஆவணப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் அவர்களுக்கும் நயன்தாரா அவர்களுக்கும் எதிர் வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதால் தனுஷ் தயாரித்து நயன் நடித்த நானும் ரவுடி தான் படத்தை குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முதலில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதி அவர்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடத்தில் முதலில் கார்த்திக் அவர்களின் மகனான கௌதம் கார்த்திக் அவர் தான் நடிக்க இருந்ததாகவும் பின் சில பல காரணங்களால் அவரால் நடிக்க இயலாததால் அதில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

You may have missed