அரசியலை வெளிப்படையாக சொல்லவும் ஒரு தைரியம் வேணும்…நந்தன் பட இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்…

தற்போது ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் வெற்றி வசூலை திரட்டி கொண்டுள்ளது.இதைத்தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அவர் பல படங்களை இப்போது கைவசம் வைத்து உள்ளார்.அடுத்தும் லைக்கா தயாரிப்பில் ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த நந்தன் திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினி அவர்கள் இயக்குனர் ரா.சரவணன் அவர்களை பாராட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, டைரக்டர் சார் நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன் என்றும் அதில் உங்க கட்ஸ் வேறலெவல் என்று ஆரம்பித்து சசிகுமார்,சமுத்திரக்கனி என அனைவரையும் பாராட்டி தள்ளியுள்ளார்.