திருமண சடங்கு சம்பர்தாய ஹால்தி-யில் சிரித்து கொண்டாடிய நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா…

திரையுலகில் மிகவும் பிரபலமானவர் தான் நாக அர்ஜுனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் மூத்த மகன் தான் நாகசைதன்யா. கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்கு ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவியின் ஜோடியாக வந்த சோபிதா துலிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.பீதியை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8-ல் இவர்களுக்கு கோலாகலமாக நிச்சர்த்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இவர்களின் ஹால்தி விழா ஹைதராபாத்தில் இன்று கோலாகலமாக நடந்துள்ளது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துள்ளனர். அனைவருமே மஞ்சள் நிறம் கலந்த ஆடையுடன் என்ஜாய் பண்ணிகொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

You may have missed