ரகுமான் மிக நல்லவர்… ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்தால் கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு சாய்ரா வெளியிட்ட ஆடியோ…

இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை வாங்கி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.தற்போது சில தினங்களாகவே இவருக்கும் இவரின் மனைவி சாய்ராவிற்கும் உள்ள விவகாரத்து பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசபட்டு வருகிறது.1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து 29 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்த இவர்களின் விவகாரத்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1ஆண் மகனும் உள்ளார். இவர்களின் மூத்த பெண்ணான கதீஜாக்கு திருமணம் ஆன நிலையில் இவர்கள் ஏன் விவகாரத்து பெறுகிறார்கள் என அனைவரும் பேசும் அளவிற்கு தான் இருந்தது. இந்நிலையில் இவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டேவும் விவாகரத்து செய்வதால் இவர்களை வைத்து சர்ச்சை கிளம்பியது.இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு ஆடியோ கிளிப்பை ரகுமானை மனைவி சாய்ரா பானு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, எனது கணவர் மீது தயவு செய்து யாரும் பழிபோட்டு பேச வேண்டாம். அவர் மிகவும் சிறந்த மனிதர் எனவும் அவரை போன்று ஒரு நல்ல மனிதரை யாரும் பார்க்க முடியாது எனவும்,மேலும் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நான் மும்பையில் இருக்கிறேன் .அதனால் தான் சிறு இடைவெளி அவரிடம் இருந்து எடுத்துக்கொள்ள விரும்பினேன். அவர் யாருடனும் தொடர்பில் இல்லை தயவு செய்து யாரும் அப்படி கூறாதீர்கள் என கூறியுள்ளார். தற்போது இந்த ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.