பிக் பாஸ் வீட்டினுள் சண்டை போட்டுக்கொண்ட ஆண்கள் அணியினர்… ஒரு டேலண்ட்டும் உனக்கு இல்லை முத்து… ஆத்திரத்தில் கூறிய அருண்…

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் இந்த வருடம் சற்று ஒதுங்கி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்குகிறார் இந்த வருடம். முதல் வாரத்தில் முதல் நாளே சாச்சனாவை வெளியை அனுப்பி பார்ப்பப்பை ஏற்படுத்தினார் VJS.

இந்நிலையில் முதல் வாரத்தில் வீட்டின் நடுவே கொடு போட்டார்கள். அதைத்தொடர்ந்து ரவீந்தர்க்கு உடம்பு முடியாமல் வீட்டை விட்டு எலிமினேஷனில் சென்றார். இதை தொடர்ந்து அர்னாவ், தர்ஷா குப்தா, சுனிதா என பலரும் வெளியேறினார். இந்த வாரம் போட்டிகள் எல்லாமே கடுமையாக இருந்த நிலையில் முத்துவிடம் கோபத்தில் கத்தியுள்ளனர் ஆண்கள் அணியினர்.

போட்டியாளர்களை விஜய் சேதுபதி வேற வார இறுதியில் கடுமையாக கேள்வி கேட்டு திட்டி வருவதால் கோபமடைந்த ஆண்கள் அணியினர் முத்துவின் பிளானை அறிந்து கொண்டு சண்டையிட்டனர். அதில் அருண் உனக்கு ஒரு டேலண்ட்டும் இல்லை முத்து நீ வெறும் பே பே தான் என கத்திய ப்ரோமோ தற்சமயம் வெளியாகி வைரலாகி வருகிறது.

You may have missed